நாகை செல்கிறார் தவெக தலைவர் விஜய்… பல்வேறு நிபந்தனைகளுக்கு மத்தியில் பிரசாரம்…
தவெக தலைவர் விஜய் இரண்டாம் கட்ட பிரசாரத்தை மேற்கொள்வதற்காக இன்று நாகை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், ‘மக்களுடன் சந்திப்பு’ என்ற பெயரில் தமது முதல் சுற்றுப்பயணத்தை கடந்த 13ஆம் தேதி சனிக்கிழமை அன்று தொடங்குகினார். தொடர்ந்து டிசம்பர் மாதம் 20ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று மக்கள் சந்திப்பு கூட்டம் பிரச்சாரங்களை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், விஜய்யின் பிரசாரத்தின்போது ஏராளமான ரசிகர்களும், தொண்டர்களும்…
LJK தலைவரை சந்தித்து மீனவம் காப்போம் இயக்கத்தினர் மனு!
மீனவம் காப்போம் மக்கள் இயக்கம் சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வநாதன் தலைமையில் நிர்வாகிகள் லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினை நேரில் சந்தித்து புதுவையில் லட்சிய ஜனநாயக கட்சியின் நிர்வாக பொறுப்பு மற்றும் வேட்பாளர் பட்டியலில் மீனவர்களுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர். மேலும் கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் மீனவர்களுக்கு தற்போது 2 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வரும் நிலையில், அதனை 10 சதவீதமாக உயர்த்த…
LJK | லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினை சந்தித்த உப்பளம் தொகுதி JCM மக்கள்
புதுச்சேரி உப்பளம் தொகுதியை சேர்ந்த JCM மக்கள் மன்ற நிர்வாகி ஆறுமுகம், லட்சிய ஜனநாயக கட்சி (LJK) தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பு நிகழ்வின்போது, JCM மக்கள் மன்றத்தின் துணைத் தலைவர் ரத்தினமும் உடனிருந்தார். சந்திப்பின் போது, சமூக மற்றும் மக்கள் நல தொடர்பான விவகாரங்கள் குறித்து கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மரியாதை சந்திப்பு, கட்சி மற்றும் மக்கள் மன்றத்திற்கிடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என…
LJK | லட்சிய ஜனநாயக கட்சியில் இணைந்த வீராம்பட்டினம் மீனவ கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் இளைஞர்கள்
புதுச்சேரி : புதுச்சேரி வீராம்பட்டினம் பகுதியில் JCM மக்கள் மன்ற தலைவர் குமரன் தலைமையில், 50க்கும் மேற்பட்ட வீராம்பட்டினம் மீனவ கிராமத்தின் முக்கியஸ்தர்கள் மற்றும் இளைஞர்கள், லட்சிய ஜனநாயக கட்சி (LJK) தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினை நேரில் சந்தித்து, அக்கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்த நிகழ்வின்போது, கட்சியின் கொள்கைகள் மற்றும் சமூக நல நோக்கங்கள் குறித்து விளக்கப்பட்டதாகவும், கட்சியின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு இணைந்ததாக புதிய உறுப்பினர்கள் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. அவர்களை வரவேற்ற ஜோஸ் சார்லஸ்…
லட்சிய ஜனநாயக கட்சியில் இணைந்த முன்னாள் ராணுவ வீரர், நடிகர் அசோக்பாண்டியன் இராமசாமி
முன்னாள் ராணுவ வீரரும், தமிழ் திரைப்பட நடிகருமான அசோக்பாண்டியன் இராமசாமி, லட்சிய ஜனநாயக கட்சி (LJK) தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினை நேரில் சந்தித்து, அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்த சந்திப்பு நிகழ்வின்போது, JCM மக்கள் மன்றத்தின் துணைத் தலைவர் ரத்தினமும் உடனிருந்தார். அசோக்பாண்டியன் இராமசாமி கட்சியில் இணைந்ததைத் தொடர்ந்து, அவருக்கு கட்சி சார்பில் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டதாகவும், அரசியல் மற்றும் சமூக சேவைகளில் அவர் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த…
சென்னையில் பிட்புல், ராட்வீலர் நாய்கள் வளர்ப்பில் புதிய கட்டுப்பாடுகள்
பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சென்னையில் பிட்புல் மற்றும் ராட்வீலர் இன நாய்களை புதிதாக வாங்கி வளர்ப்பதற்கு சென்னை மாநகராட்சி தடை விதித்துள்ளது. இந்த முடிவு, சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாளை முதல் இந்த இரண்டு இன நாய்களையும் புதியதாக வாங்கி வளர்ப்பது அனுமதிக்கப்படாது. இந்த தடையை மீறி பிட்புல் அல்லது ராட்வீலர் இன நாய்களை புதிதாக வளர்ப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ரூ.1 லட்சம்…
கிராமங்களுக்கு எதிரான திட்டம்: ராகுல் காந்தி
20 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் (MGNREGA) ஒரே நாளில் தகர்க்கப்பட்டுள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். விபி ஜி ராம் ஜி (VPG Ram Ji) எனப்படும் புதிய நடைமுறை, MGNREGAவின் மறுசீரமைப்பு அல்ல என்றும், உரிமை சார்ந்த வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தின் அடிப்படை தன்மையை முற்றிலும் மாற்றி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் இனி வேலைவாய்ப்பு உத்தரவாதமாக இல்லாமல், டெல்லியால் கட்டுப்படுத்தப்படும்…
மத்திய பிரதேச அரசு மருத்துவமனையில் பெரும் அதிர்ச்சி: தலசீமியா சிகிச்சை பெற்ற 6 குழந்தைகளுக்கு HIV தொற்று
மத்திய பிரதேசம் : மத்திய பிரதேசத்தில் தலசீமியா நோய்க்காக சிகிச்சை பெற்று வந்த குழந்தைகளுக்கு தவறுதலாக HIV தொற்று உள்ள ரத்தம் செலுத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் சத்னா மாவட்ட அரசு மருத்துவமனையில் நிகழ்ந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மருத்துவமனையில் தலசீமியா சிகிச்சையில் இருந்த 6 குழந்தைகளுக்கு HIV தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, லேபரட்டரி பொறுப்பாளர் உள்ளிட்ட 4 பேரை தற்காலிகமாக பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து மத்திய பிரதேச அரசு நடவடிக்கை…
அரசியல் கூட்டங்களுக்கான நிபந்தனைகள் வழக்கு: உயர் நீதிமன்றம் தீர்ப்பு
அரசியல் கூட்டங்கள் நடத்த விதிக்கப்படும் நிபந்தனைகள் தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ள ஆலோசனைகளை பரிசீலித்து, இறுதி வழிகாட்டு நெறிமுறைகளை வரும் ஜனவரி 5ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. மேலும், அரசு வெளியிடும் வழிகாட்டு நெறிமுறைகளில் ஏதேனும் ஆட்சேபம் இருந்தால், சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் மீண்டும் உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் நீதிமன்றம் தனது உத்தரவில் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த தீர்ப்பின் மூலம், அரசியல்…
புதுச்சேரி முப்படை முன்னாள் ராணுவ வீரர்கள் நலச் சங்கம் குற்றச்சாட்டு
புதுச்சேரி : புதுச்சேரி முப்படை முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் வீரத்தாய்மார்கள் நலச் சங்கத்தின் தலைவர் மோகன், முன்னாள் ராணுவ வீரர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் முறையாக வழங்கப்படவில்லை என அரசை கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். அவர் தெரிவித்ததாவது, முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும் என பலமுறை முதலமைச்சரை சந்தித்து மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதே நேரத்தில், தொகுதி வாரியாக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் முதலமைச்சரை சந்தித்து வேண்டப்பட்ட சிலருக்கு…
புதுச்சேரியில் போலியோ சொட்டு மருந்து முகாம்: 5 வயதுக்குட்பட்ட 74,698 குழந்தைகள் பயனடைவார்கள்
புதுவை : சிறு வயது குழந்தைகளை பாதிக்கக்கூடிய போலியோ நோயிலிருந்து பாதுகாக்கும் நோக்கில், இந்திய அரசு ஆண்டுதோறும் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்களை நடத்தி வருகிறது. உலகில் உள்ள 200க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகியவற்றைத் தவிர மற்ற அனைத்து நாடுகளிலும் போலியோ நோய் முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம், வரும் 21.12.2025 அன்று புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற உள்ளது….
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை குறைவு: சவரன் ரூ.99,040-க்கு விற்பனை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கணிசமாக குறைந்துள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.480 குறைந்து ரூ.99,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், கிராம் அடிப்படையில் தங்கத்தின் விலையும் ரூ.60 குறைந்து, ஒரு கிராம் ரூ.12,380-க்கு விற்கப்படுகிறது. தங்க விலை குறைந்துள்ளதால், நகை வாங்க திட்டமிட்டிருந்த வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சி காணப்படுகிறது. சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் டாலர் மதிப்பின் மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலையில் இம்மாற்றம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
‘சிக்மா’ படத்தின் டீசர் டிசம்பர் 23ஆம் தேதி வெளியாகும்
இயக்குநர் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படமான ‘சிக்மா’ படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் இந்த படத்தின் டீசர், டிசம்பர் 23ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து, தற்போது ‘சிக்மா’ படம் பின் தயாரிப்பு பணிகளில் (Post Production) விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தொழில்நுட்ப ரீதியாக சிறப்பான படமாக ‘சிக்மா’ உருவாகி வருவதாக…
நடிகை நிதி அகர்வால், ரசிகர்கள் கூட்ட நெரிசல் குறித்து போலீசார் விசாரணை
ஹைதராபாத்தில் திரையிடப்பட்ட ஒரு நிகழ்ச்சி தொடர்பாக எழுந்த சர்ச்சையை அடுத்து, அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை நிதி அகர்வால் மற்றும் ரசிகர்களின் கூட்ட நெரிசல் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் ரசிகர்கள் அதிக அளவில் கூடியதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த கேள்விகள் எழுந்துள்ளன. குறிப்பாக, நிகழ்ச்சி நடந்த இடத்தில் பாதுகாப்பு முறைகள் போதுமானதாக இல்லை என புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் தொடர்புடையவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்….
புதுச்சேரியில் வண்ணமயமான அலங்காரப் பொருட்கள் விற்பனை களைகட்டல்…
கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான கிறிஸ்துமஸ், வரும் 25ஆம் தேதி உலகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ளது. இயேசு கிறிஸ்து பிறந்த தினமான இந்நாளை, கிறிஸ்தவர்கள் தங்களது இல்லங்களில் குடில் அமைத்து, இயேசு சொரூபத்தை வைத்து வெகு விமரிசையாகக் கொண்டாடுவர். இதற்காக வீடுகளில் ஸ்டார், குடில், கிறிஸ்துமஸ் மரம் உள்ளிட்ட அலங்காரங்களை அமைத்து அழகுபடுத்துவது வழக்கம். அந்த வகையில், புதுச்சேரியில் விதவிதமான வண்ணங்களிலும் புதிய வடிவங்களிலும் கிறிஸ்துமஸ் ஸ்டார்கள் விற்பனைக்கு வந்துள்ளன. அதேபோல், கிறிஸ்துமஸ் மரம், குடில் அமைப்பதற்கு…
வங்கதேசத்தில் அரசியல் பதற்றம்: மாணவர் இயக்கத் தலைவர் ஹாடி சுட்டுக் கொலை
வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அரசுக்கு எதிராக கடந்த ஆண்டு நடைபெற்ற பெரும் போராட்டங்களைத் தொடர்ந்து, அவர் பதவியை ராஜிநாமா செய்து நாட்டைவிட்டு வெளியேறினார். அந்த போராட்டங்களை முன்னணியில் இருந்து வழிநடத்திய மாணவர் இயக்கத்தின் தலைவராக ஷெரீஃப் உஸ்மான் ஹாடி செயல்பட்டார். இந்த சூழ்நிலையில், வரவிருக்கும் வங்கதேச பொதுத் தேர்தலை முன்னிட்டு, தலைநகர் டாக்காவில் தனது தேர்தல் பிரசாரத்தை ஹாடி தொடங்கியிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத முகமூடி அணிந்த நபர்கள் அவரைத் துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது….
இன்று வெளியாகிறது வரைவு வாக்காளர் பட்டியல்: பெயர் இல்லையெனில் என்ன செய்ய வேண்டும்?
SIR பணிகளைத் தொடர்ந்து, தமிழ்நாட்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (டிசம்பர் 19) வெளியிடப்படுகிறது. இதில் உங்கள் பெயர் இருக்கிறதா? இல்லை என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். தேர்தல் ஆணையத்தின் https://electoralsearch.eci.gov.in/ என்ற இணையதளத்திற்குச் சென்று உங்களுடைய வாக்காளர் அடையாள எண் (EPIC) அல்லது உங்களுடைய தனிப்பட்ட விவரங்களை அளித்தால் விவரங்கள் திரையில் தோன்றும். அதில் உங்களுடைய பெயர், தந்தை பெயர், மாவட்டம், தொகுதி, வாக்குச்சாவடி இடம், வாக்குச்சாவடி தொகுதி எண் ஆகியவை…
பாதியிலே நிறுத்தப்பட்ட அரசு வீடுகள்: நரிக்குறவர் சமூக மக்கள் வேதனை
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் புறவழிச் சாலையில் அமைந்துள்ள திருவள்ளுவர் நகர் பகுதியில் வசித்து வரும் நரிக்குறவர் பழங்குடி சமூக மக்களுக்கு, தமிழக அரசின் இலவச வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வீடுகள் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன. எனினும், இந்த வீடுகளின் கட்டுமானப் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால், பயனாளிகள் நீண்ட காலமாக வீடுகள் இன்றி தவித்து வருவதாக கூறப்படுகிறது. கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்கக் கோரி மாவட்ட நிர்வாகம், நகராட்சி, வட்டாட்சியர் உள்ளிட்ட…
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூண் சம்பவம்: அண்ணாமலை வருத்தம்
மதுரை திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து, பக்தர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் உயிரிழந்த பக்தரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த அண்ணாமலை, இவ்விவகாரத்தில் நீதித்துறை மீது முழு நம்பிக்கை உள்ளதாகவும் கூறினார். சம்பவம் தொடர்பாக உண்மை நிலவரம் வெளிவரும் வரை அனைவரும் அமைதியும் பொறுமையும் காக்குமாறு பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டார். இந்த துயரச்…
லட்சிய ஜனநாயக கட்சியில் இணைந்த நடிகர் விஜய்யின் நண்பர்
தவெக தலைவர் விஜய்யின் நண்பரும் நடிகருமான தாடி பாலாஜி லட்சிய ஜனநாயக கட்சியில் இணைந்தார். புதுவையில் புதிதாக தொடங்கப்பட்ட லட்சிய ஜனநாயக கட்சியில் பல்வேறு தரப்பினர் இணைந்து வரும் நிலையில் நடிகர் விஜய்க்கு ஆதரவாக செயல்பட்டு வந்த நடிகர் தாடி பாலாஜி லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினை புதுவையில் நேரில் சந்தித்து தன்னை லட்சிய ஜனநாயக கட்சியில் இணைத்து கொண்டார். உடன் புதுச்சேரியை சேர்ந்த தொழிலதிபர்கள் லியோகுமார், சுனில்குமார், குமரன் மற்றும் சிவராமன்…
தடுப்பூசியால் உயிரிழந்த குழந்தையின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்த LJK தலைவர்!
புதுச்சேரி நெட்டப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்திய குழந்தை உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவர் பற்றாக்குறையால் கடந்த 5ஆம் தேதி உயிரிழந்த நிலையில் குழந்தையின் குடும்பத்தினரை லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அந்த குழந்தையின் பெற்றோருக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்தார். உடன் சட்டமன்ற உறுப்பினர் அங்காளன், பொதுச்செயலாளர்கள் பூக்கடை ரமேஷ், பிரபாகரன், மண்டல பொதுச்செயலாளர் முனைவர் கண்ணபிரான், சுரேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள்…
மக்கள் முன்னேற்ற கழக மீனவர் அணி கூட்டம்
புதுவை மாநில மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில மீனவர் அணி ஆலோசனைக் கூட்டம், அணி தலைவர் இதயச்சந்திரன் தலைமையில் கிழக்கு மாவட்ட தலைவர் ஜி. சி சந்திரன் மற்றும் கட்சியின் துணைத் தலைவர் நித்தியானந்தம் முன்னிலையில் மில்லினியம் வீதி அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் புதுவை அரசு மீனவர்களுக்கான இ.பி.சி இட ஒதுக்கீட்டை இரண்டு சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், காலாப்பட்டு சாசன் கம்பெனியின் கடலில் உள்ள கழிவுநீர் குழாய் குறித்து…
கிராமத்து மக்களுக்கு பேருந்து வசதி கோரி LJK தலைவர் மனு
புதுவை இருளஞ்சந்தை மற்றும் தென்னம்பாக்கம் சுற்றுவட்டார கிராமங்களுக்கு பேருந்து வசதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி, லட்சிய ஜனநாயக கட்சியின் (LJK) தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் மனு அளித்தார். பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அன்றாடப் போக்குவரத்துக்கு கடும் சிரமம் எதிர்கொண்டு வருவதாகக் கூறி, இதற்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கையுடன் சம்பந்தப்பட்ட துறை ஆணையரிடம் நேரில் சந்தித்து LJK தலைவர் மனு வழங்கினார். போக்குவரத்து துறை ஆணையர் அமன் சர்மா நேரில் மனுவை…
LJK-வில் ஐக்கியமான உழவர்கரை தொகுதி முக்கியஸ்தர்கள்
புதுவை உழவர்கரை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தியாகுபிள்ளை நகரைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள், லட்சிய ஜனநாயக கட்சியின் (LJK) தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினை நேரில் சந்தித்து கட்சியில் இணைந்தனர். இந்த சந்திப்பின் போது, கட்சியின் கொள்கைகள் மற்றும் எதிர்கால செயல்திட்டங்களை ஏற்றுக்கொண்டு, LJK-வில் இணைவதாக அவர்கள் உறுதியளித்தனர். புதிய உறுப்பினர்களை வரவேற்ற தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின், கட்சியின் வளர்ச்சியில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கரன், LJK பொதுச்செயலாளர்…
மல்யுத்தத்தில் வெற்றி – மாணவிக்கு பாராட்டு
புதுவை : தேசிய அளவில் இரண்டாவது இடம் பிடித்து சாதனை படைத்த மாணவி சங்கவியை லட்சிய ஜனநாயக கட்சியின் (LJK) தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் சால்வை அணிவித்து பாராட்டினார். மல்யுத்தத்தில் தேசிய அளவில் 2வது இடம் பிடித்த மாணவி சங்கவிக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. மாணவியின் கல்வி சாதனைக்கு வாழ்த்து தெரிவித்த ஜோஸ் சார்லஸ் மார்டின், இளம் தலைமுறையினர் கல்வி மற்றும் விளையாட்டுத் துறைகளில் சாதிக்க வேண்டும் என ஊக்கமளித்தார்….
பொங்கலுக்கு பிறகு பாதயாத்திரை – LJK தலைவர் அறிவிப்பு
புதுவை : புதுவையில் லட்சிய ஜனநாயக கட்சியின் (LJK) தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பொங்கலுக்கு பிறகு 60 நாட்கள் புதுவை முழுவதும் பாதயாத்திரை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். புதுவை மக்களின் பிரச்சனைகளை நேரடியாக அறிந்து, அவர்களது கோரிக்கைகளை கேட்கும் நோக்கில் இந்த பாதயாத்திரை நடத்தப்படுவதாக அவர் கூறினார். மேலும், பாதயாத்திரையின் போது மக்களை சந்தித்து கட்சியின் கொள்கைகள் மற்றும் செயல்திட்டங்களை விளக்க உள்ளதாகவும் தெரிவித்தார். பாதயாத்திரை தொடங்கும்…
LJK மாநில, மண்டல நிர்வாகிகள் நியமனம்
புதுவை : புதுவையில் ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்களின் தலைமையில் தொடங்கப்பட்டுள்ள லட்சிய ஜனநாயக கட்சியின் (LJK) மாநில மற்றும் மண்டல நிர்வாகிகள் நியமன விழா இன்று புதுவை ரெட்டியார்பாளையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் முதற்கட்டமாக மாநிலப் பொதுச்செயலாளர்கள், மாநிலச் செயலாளர்கள், மண்டலப் பொதுச்செயலாளர்கள் மற்றும் மாநில செய்தித் தொடர்பாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு மொத்தம் 13 நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சித் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் அறிவிப்பு வெளியிட்டார். மாநிலப் பொதுச்செயலாளர்களாக டாக்டர் ஆர். துறைசாமி, பூக்கடை…
ரெட்டியார்பாளையத்தில் லட்சிய ஜனநாயக கட்சி தலைமை அலுவலகம் திறப்பு
புதுவை : புதுவை ரெட்டியார்பாளையம் பகுதியில் லட்சிய ஜனநாயக கட்சியின் (LJK) தலைமை அலுவலகம் சிறப்பு பூஜைகளுடன் இன்று திறந்து வைக்கப்பட்டது. கட்சித் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் குத்துவிளக்கேற்றி அலுவலகத்தை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து பிள்ளையார் பூஜையுடன் அலுவலக திறப்பு விழா இனிதே நடைபெற்றது. அலுவலக திறப்பு விழாவிற்கு வருகை தந்த கட்சித் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினுக்கு சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கரன் சால்வை அணிவித்து வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் லட்சிய ஜனநாயக…
எத்தியோப்பியா: பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு
அடிஸ் அபாபா: அதிகாரப்பூர்வ பயணமாக எத்தியோப்பியா சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டில் உற்சாகமான வரவேற்பும், உயரிய அரச மரியாதையும் வழங்கப்பட்டது. எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவில் உள்ள விமான நிலையத்திற்கு நேரில் வந்த அந்நாட்டு பிரதமர் அபி அஹமது, பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்று வாழ்த்தினார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில், எத்தியோப்பியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு மிக உயரிய விருதான ‘தி கிரேட் ஹானர் நிஷான்’ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது….
ஐபிஎல் 2026 ஏலம்: இளம் இந்திய வீரர்கள் – கோடிகளில் குவிந்த ஒப்பந்தங்கள்
அபுதாபி: ஐபிஎல் 2026 தொடருக்கான வீரர்கள் ஏலம் நேற்று (டிசம்பர் 16) அபுதாபியில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் பல ஆச்சரியமூட்டும் நிகழ்வுகள் அரங்கேறி, கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்தன. இந்த முறை, வழக்கமாக அதிக விலைக்கு போகும் பெரிய சர்வதேச நட்சத்திரங்களை விட, சர்வதேச போட்டிகளில் இதுவரை விளையாடாத இளம் இந்திய வீரர்களே தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தனர். உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் காட்டிய திறமையை அடிப்படையாக கொண்டு, இந்த வீரர்கள் சாதனை அளவிலான தொகைகளுக்கு ஏலம் போய்…
சிட்னி துப்பாக்கிச்சூடு: துணிச்சலுடன் தாக்குதலாளரை கட்டுப்படுத்திய அகமத்-அல்-அகமது, பிரதமர் பாராட்டு
சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூதர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியின்போது நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில், தாக்குதலாளரை துணிச்சலுடன் எதிர்த்து மற்றவர்களின் உயிரை காப்பாற்ற முயன்ற அகமத்-அல்-அகமதுவை அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மருத்துவமனையில் நேரில் சந்தித்து பாராட்டினார். சம்பவத்தின்போது துப்பாக்கியுடன் தாக்குதல் நடத்திய நபர் மீது பாய்ந்து, அவரது துப்பாக்கியை பிடுங்க முயன்ற அகமத்-அல்-அகமது, அந்த முயற்சியில் குண்டடிபட்டு பலத்த காயமடைந்தார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் அகமத்-அல்-அகமதுவை சந்தித்த பிரதமர் அந்தோணி…
நேற்று மார்கழி முதல் நாள் !
நேற்று மார்கழி முதல் நாள் ஆண்டாள் வேடமிட்டு பக்தி பரவசத்தில் தென் சென்னை திமுக எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன். அன்னவயல் புதுவை ஆண்டாள் அரங்கர்க்குப் பன்னு திருப்பாவை பல்பதியம் -இன்னிசையால் பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை பூமாலை சூடிக் கொடுத்தாளைச் சொல்லு சூடிக்கொடுத்த சுடர்க் கொடியே தொல் பாவை பாடி அருளவல்ல பல்வலையாய் -நாடி நீ வேங்கடவர்க்கு என்னை விதி என்ற இம்மாற்றம் நாம் கடவா வண்ணமே நல்கு. மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!…
ஸ்ரீ முத்தாலம்மன் ஆலய கும்பாபிஷேகத்திற்கு நன்கொடை: ஜோஸ் சார்லஸ் மார்டின் வழங்கினார்
புதுச்சேரி: புதுச்சேரி நெட்டப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட மூலப்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்தாலம்மன் ஆலயத்தின் கும்பாபிஷேக விழாவிற்காக, லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கினார். ஊர் கிராம முக்கியஸ்தர்கள் இளங்கோ தலைமையில், ஆலய கும்பாபிஷேக ஏற்பாடுகள் தொடர்பாக ஜோஸ் சார்லஸ் மார்டினை சந்தித்தனர். அப்போது, ஆலய திருப்பணி மற்றும் கும்பாபிஷேக பணிகள் சிறப்பாக நடைபெற வேண்டி அவர் இந்த நன்கொடையை வழங்கினார். இந்த நிகழ்வில் ஆலய நிர்வாகிகள், கிராம முக்கியஸ்தர்கள்…
கோவில் திருப்பணிக்கு நன்கொடை: ஜோஸ் சார்லஸ் மார்டின் வழங்கினார்
புதுச்சேரி: புதுச்சேரி வில்லியனூர் வெள்ளாழர் வீதியில் அமைந்துள்ள அக்கா சாலை விநாயகர் கோவில் திருப்பணிக்காக, லட்சிய ஜனநாயக கட்சி (LJK) தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் நன்கொடை வழங்கினார். LJK பொதுச்செயலாளர் பூக்கடை ரமேஷ் தலைமையில், கோவில் நிர்வாகிகள் திருப்பணி தொடர்பான பத்திரிகையை வழங்கியதை தொடர்ந்து, கோவில் திருப்பணிக்காக ரூ.1 லட்சம் நன்கொடையாக ஜோஸ் சார்லஸ் மார்டின் வழங்கினார். இந்த நிகழ்வில் கோவில் நிர்வாகிகள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு, திருப்பணி பணிகள் சிறப்பாக…
‘YOU BASTARDS’ – ஊடக பொறுப்பின் இரண்டு முகங்கள்
ஆஸ்திரேலியாவின் Daily Telegraph நாளிதழ், போண்டி கடற்கரை பகுதியில் நடந்த யூதர்களுக்கு எதிரான தீவிரவாத தாக்குதலை முன்பக்கத்தில் ஒரே வரியில் சுட்டிக்காட்டியது – “YOU BASTARDS.” முதல் பார்வையில் இந்த தலைப்பு கடுமையானதாக தோன்றலாம். ஆனால் அதன் பின்னணி, ஒரு குறிப்பிட்ட ஊடகப் பண்பாட்டை வெளிப்படுத்துகிறது. அந்த செய்தியில், குற்றவாளியின் பெயர், குடும்பப் பின்னணி, கல்வி, தனிப்பட்ட வாழ்க்கை போன்ற விவரங்கள் எதுவும் முன்னிலைப்படுத்தப்படவில்லை. மாறாக, சம்பவத்தின் தீவிரம், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் மட்டுமே செய்தியின்…
விஜய் மக்கள் சந்திப்பு: காவல்துறை விதித்த கட்டுப்பாடுகள்
ஈரோடு: த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு, காவல்துறை சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, நிகழ்ச்சி நடைபெறும் போது தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் பார்வை தடுப்புகள் அமைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பிரசார வாகனத்தில் முக்கிய நபர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்றும், மக்களுக்கும் பிரசார வாகனத்திற்கும் குறைந்தபட்சம் 50 அடி இடைவெளி பராமரிக்கப்பட வேண்டும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. நிகழ்ச்சி நடைபெறும் திடலில், தெளிவாக…
இன்று தங்கம் விலையில் சிறிய சரிவு: சவரன் ரூ.98,800
சென்னை: தங்கம் விலையில் இன்று சற்று குறைவு பதிவாகியுள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.165 குறைந்து ரூ.12,350-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில், சவரன் (8 கிராம்) தங்கத்தின் விலை ரூ.1,320 குறைந்து ரூ.98,800 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.4 குறைந்து ரூ.211-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிலோ வெள்ளி ரூ.4 ஆயிரம் குறைந்து ரூ.2 லட்சத்து 11 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டு…
சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
சென்னை: ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளும் பயணிகளுக்கு வசதிகள் ஏற்படுத்தும் நோக்கில், சென்னையில் கட்டப்பட உள்ள தமிழ்நாடு ஹஜ் இல்லத்திற்கான அடிக்கல்லை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நாட்டினார். இந்த ஹஜ் இல்லம் ஒரு ஏக்கர் அரசு நிலத்தில் கட்டப்படவுள்ளது. இதில் ஒரே நேரத்தில் சுமார் 400 ஹஜ் யாத்திரை பயணிகள் தங்கும் வகையில் தங்கும் அறைகள், அடிப்படை வசதிகள் மற்றும் தேவையான ஆதரவு அமைப்புகள் உருவாக்கப்பட உள்ளன. இந்த திட்டம் நிறைவேறுவதன் மூலம், ஹஜ் யாத்திரை செல்லும்…
புதுவையில் 85,531 வாக்காளர்கள் நீக்கம்: மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்
புதுச்சேரி: தீவிர சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, புதுச்சேரியில் வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் குலோத்துங்கன் இன்று வெளியிட்டார். இந்த திருத்தத்தின் அடிப்படையில், புதுச்சேரியில் மொத்த வாக்காளர்களில் 10.04 சதவீதம் என 85,531 வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, மாஹே மற்றும் யேனாம் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகளின் முடிவாக இந்த வரைவு பட்டியல் வெளியிடப்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, தகுதியான வாக்காளர்கள் தவறுதலாக நீக்கப்பட்டிருந்தால்,…
நவோதயா பள்ளிகள் விவகாரம்: தமிழக அரசு-மத்திய அரசு பேச்சுவார்த்தை அவசியம் – உச்சநீதிமன்றம்
புதுடெல்லி: இந்தியா கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் செயல்படும் நாடு என்றும், அதனால் தமிழக அரசு மற்றும் மத்திய அரசு இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி நிலுவையில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை அமைப்பது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், அந்த பள்ளிகளை நிறுவுவதற்கான பொருத்தமான இடங்களை ஆறு வார காலத்திற்குள் கண்டறிய தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், கல்வி சார்ந்த வளர்ச்சியை முன்னிறுத்தி, இரு அரசுகளும் ஒருங்கிணைந்து…
இன்று 2026 ஐபிஎல் மினி ஏலம்: அபுதாபியில் நடைபெறுகிறது
அபுதாபி: 2026 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் இன்று அபுதாபியில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்திற்கு 240 இந்திய வீரர்கள் மற்றும் 110 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 350 வீரர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளனர். இந்திய நேரப்படி இன்று மதியம் 2.30 மணிக்கு ஏலம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல அணிகள் தங்களது அணிகளை பலப்படுத்தும் நோக்கில் இந்த மினி ஏலத்தை ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றன.
இந்தியா-ரஷ்யா ராணுவ ஒத்துழைப்பில் புதிய கட்டம்: RELOS ஒப்பந்தத்திற்கு ரஷ்யா ஒப்புதல்
புதுடெல்லி: இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான பாதுகாப்பு மற்றும் ராணுவ ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், RELOS (Reciprocal Exchange of Logistics) ஒப்பந்தத்திற்கு ரஷ்யா அதிகாரப்பூர்வ ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த ஒப்பந்தத்தை ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் அங்கீகரித்து கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. RELOS ஒப்பந்தத்தின் மூலம், இந்தியா மற்றும் ரஷ்யா தங்களது ராணுவப் படைகள், போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்களுக்கு தேவையான தளவாட வசதிகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ள முடியும். இதன் மூலம் இரு…
அதிகாரிகளின் வீடுகளில் இருந்த ஆர்டர்லிகள் திரும்பப் பெறல்.
சென்னை: அதிகாரிகளின் வீடுகளில் பாதுகாப்பு மற்றும் தனிப்பணிகளில் ஈடுபட்டு வரும் ஆர்டர்லி காவலர்கள் இனி அந்தப் பணிகளில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்று தமிழக பொறுப்பு டிஜிபி அபய் குமார் சிங் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், அதிகாரிகளின் இல்லங்களில் நியமிக்கப்பட்டு தனிப்பணிகளை மேற்கொண்டு வந்த காவலர்கள், தங்களது முதன்மை காவல் பொறுப்புகளுக்கு மீண்டும் மாற்றப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பொதுப் பாதுகாப்பு மற்றும் துறை சார்ந்த முக்கிய பணிகளில் காவல் துறையின் மனிதவளத்தைச்…
ஈரோட்டில் நாளை மறுநாள் விஜய் பிரசார பொதுக்கூட்டம்: மைதானம் சீரமைக்கும் பணிகள் தீவிரம்
ஈரோடு: ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சரளை பகுதியில் உள்ள சுங்கச்சாவடி அருகே, நாளை மறுநாள் (வியாழக்கிழமை) த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கட்சித் தலைவர் விஜய் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். விஜயபுரி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் இந்த பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், 25 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்துக்கு அனுமதி கோரியபோது, போலீஸ் துறை சார்பில் 84 கேள்விகள் எழுப்பப்பட்டன. அவற்றுக்கான விளக்கங்கள்…
ஜனவரியில் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி
புதுடெல்லி: தமிழக சட்டசபை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், கூட்டணியை பலப்படுத்தி ஆட்சியை கைப்பற்ற பா.ஜ.க. தலைமையகம் தீவிர வியூகங்களை வகுத்து வருகிறது. வழக்கமாக தேர்தலுக்கு முன்பு குறைந்தது மூன்று முறை பிரதமர் மாநிலத்திற்கு வருகை தருவார். அந்த வகையில், வருகிற ஜனவரி மாதத்தில் அவரது முதல் தமிழக பயணம் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பயணத்தின் போது ராமேசுவரத்தில் நடைபெற உள்ள காசி தமிழ் சங்கமத்தின் நிறைவு விழா, விவசாயிகளை சந்திக்கும்…
கோவில் நிலத்தில் அங்கன்வாடி கட்டிடம்? பூமி பூஜைக்கு எதிர்ப்பு!
புதுவை கதிர்காமம் தொகுதிக்குட்பட்ட சண்முகாபுரம் சொக்கநாதன்பேட் பகுதியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி மூலமாக புதிதாக அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்காக டெண்டர் விடப்பட்டது. இதையடுத்து, கட்டுமான பணிக்கான பூமிபூஜை நடத்த பந்தல் அமைக்கும் பணி நேற்று காலை நடந்தது. ஒப்பந்ததாரர், உழவர்கரை நகராட்சி அதிகாரிகள், தொகுதி நிர்வாகிகள் இதில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதி பொதுமக்கள் அங்கு வந்து, அங்கன்வாடி கட்டிடம் கட்டப்படும் இடம் கோயிலுக்கு சொந்தமான இடம் என்றும், இங்கு கட்டிடம் கட்டக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்….
JCM மக்கள் மன்றத்தின் 16வது கிளை புதுவை நெல்லித்தோப்பில் திறப்பு!
புதுவையில் JCM மக்கள் மன்றத்தின் 16வது கிளை நெல்லித்தோப்பில் திறக்கப்பட்டது. லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் JCM மக்கள் மன்ற தலைவர் ரீகன் ஜான்குமார் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றினார். மேலும், நெல்லித்தோப்பு JCM மக்கள் மன்ற கிளை தலைவர் விஜய்ராஜ் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். JCM மக்கள் மன்ற அலுவலக திறப்பு விழாவுக்கு வருகை தந்த லட்சிய ஜனநாயக கட்சி…
LJK தலைவரை சந்தித்து நன்றி தெரிவித்த புதுவை கிரிக்கெட் வீரர்கள்!
புதுவை மாநிலத்தை சேர்ந்த வீரர்கள் புதுவை கிரிக்கெட் அணியில் சேர்க்கப்படாததை கண்டித்து லட்சிய ஜனநாயக கட்சி தொடக்க விழாவில் அக்கட்சியின் தலைவர் சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின் பேசியிருந்தார். இந்த நிலையில் LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் பேசியதை அறிந்த வீரர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர், நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். மேலும் தங்களுக்கு தொடர்ந்து புதுவை அணியில் இடம் கிடைப்பதில்லை எனவும் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் வீரர்கள் தங்களது குறைகளை LJK தலைவர்…
திருநள்ளாறில் சோமவார சங்காபிஷேகம் – குவிந்த பக்தர்கள்!
திருநள்ளாறில் உள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தில் கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தை முன்னிட்டு நடைபெற்ற 1008 சங்காபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் உள்ள உலக பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானம் ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தில் சோமவாரத்தை முன்னிட்டு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வர சுவாமிக்கு 1008 சங்காபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விசேஷ ஹோமம் மற்றும் யாகமும் அதனை தொடர்ந்து…
LJKவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்!
புதுவையில் சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின் லட்சிய ஜனநாயக கட்சியை பிரம்மாண்டமாக கொடியேற்றி தொடங்கிய நிலையில் பல்வேறு கட்சிகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் லட்சிய ஜனநாயக கட்சியில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் புதுவையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் JCM மக்கள் மன்ற தலைவர் ரீகன் ஜான்குமார் மற்றும் பொதுச்செயலாளர் (சட்டம்) வழக்கறிஞர் பிரபாகரன் தலைமையில் புதுவை வழக்கறிஞர் சங்க பொருளாளர் ராஜ பிரகாஷ், முன்னாள் பொருளாளர் லட்சுமணன் ஆகியோர்…
சென்னையில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் – இன்று 71 இடங்களில் ஏற்பாடு
சென்னையில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, பொதுமக்களின் உடல்நலத்தை பாதுகாக்கும் நோக்கில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் இன்று (டிசம்பர் 15) நடத்தப்பட்டு வருகின்றன. நகரில் உள்ள 15 மண்டலங்களிலும் இந்த சிறப்பு மருத்துவ முகாம்கள் ஒரே நேரத்தில் நடைபெறுகின்றன. மழைக்காலத்தில் பரவும் காய்ச்சல், வைரஸ் தொற்று, சளி, இருமல் உள்ளிட்ட நோய்களுக்கு உடனடி சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கும் வகையில் இந்த முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தமாக இன்று 71 இடங்களில் வடகிழக்கு பருவமழைக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள்…
வாகன சோதனையில் ஈடுபட்ட பெண் போலீஸை ஆட்டோவில் கடத்த முயற்சி – மயிலாப்பூரில் பரபரப்பு
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் அருகே, நேற்று முன்தினம் பெண் போலீஸ் ஒருவர் வாகன சோதனை பணியில் ஈடுபட்டிருந்தார். அந்த நேரத்தில், ஒருவழிப் பாதையில் இருந்து வேகமாக வந்த ஒரு ஆட்டோவை அவர் நிறுத்த முயன்றார். ஆட்டோவை ஓட்டிய நபர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. முதலில் வாகனத்தை நிறுத்துவது போல நடித்து, திடீரென பெண் போலீஸை கட்டிப்பிடித்து ஆட்டோவில் ஏற்றி கடத்த முயன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அதிர்ச்சியடைந்த பெண் போலீஸ் கூச்சலிட்டதையடுத்து, அருகில் இருந்த பொதுமக்கள்…
ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்தை எட்டும் அபாயம் – நகை வாங்குவோர் கவலை
சென்னையில் தங்கத்தின் விலை மீண்டும் வேகமாக உயர்ந்து வருவதால் நகை வாங்குவோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். சமீபத்தில் அமெரிக்க மத்திய பெடரல் வங்கி வட்டி விகிதத்தை குறைத்தது இந்த திடீர் விலை உயர்வுக்கான முக்கிய காரணமாக கருதப்படுகிறது. வட்டி விகிதம் குறைக்கப்படும்போது, முதலீட்டாளர்கள் அரசு பத்திரங்கள் மற்றும் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதை குறைத்து, பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கத்தின் மீது அதிக கவனம் செலுத்துவது வழக்கம். இதன் காரணமாக தங்கத்தில் முதலீடு அதிகரித்து, அதன் விலை உயர்ந்து வருவதாக…
100க்கும் மேற்பட்டோர் லட்சிய ஜனநாயக கட்சியில் இணைந்தனர்!
சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின் லட்சிய ஜனநாயக கட்சியை தொடங்கிய நிலையில் புதுச்சேரி ஊசுடு தொகுதியை சேர்ந்த ஜவஹர் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் லட்சிய ஜனநாயக கட்சியில் இணைந்தனர். JCM மக்கள் மன்றத்தின் தவளக்குப்பம் கிளை தலைவர் சுரேஷ் உடன் LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினை நேரில் சந்தித்து தங்களை கட்சியில் இணைத்து கொண்டனர்.
LJKவில் இணைந்த முன்னாள் சபாநாயகர் மகன்
காரைக்கால் மாவட்டம் நிரவி திருப்பட்டினம் பகுதியை சேர்ந்த புதுவை முன்னாள் சபாநாயகர் VMC சிவகுமாரின் இளையமகனும் பாஜக முன்னாள் நிர்வாகியுமான மனோ என்கின்ற VMC மனோகரன் லட்சிய ஜனநாயக கட்சியில் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் முன்னிலையில் இணைந்தார். VMC மனோகரன் கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு மிக சொற்ப வாக்குகளில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டார். சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின் லட்சிய ஜனநாயக கட்சியை தொடங்கிய நிலையில் தன்னை…
லட்சிய ஜனநாயக கட்சியில் இணைந்த காங்கிரஸ் கட்சியினர்!
புதுவை காங்கிரஸ் கட்சி நிர்வாகி தங்க கலைமாறன், காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் சரி இல்லாததால் தனது ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்டோருடன் அக்கட்சியில் இருந்து விலகி லட்சிய ஜனநாயக கட்சியில் இணைந்தார். LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினை நேரில் சந்தித்து தங்களை லட்சிய ஜனநாயக கட்சியில் இணைத்து கொண்டனர். முன்னதாக தங்க கலைமாறன் பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
போலி மருந்து விவகாரத்தில் சிபிஐ விசாரணை மட்டுமே உண்மையை வெளிக்கொண்டு வரும் – ஜோஸ் சார்லஸ் மார்டின்
புதுச்சேரி:போலி மருந்து விவகாரத்தில் எத்தனை SIT குழுக்கள் அமைத்தாலும், முழுமையான வெளிப்படைத்தன்மை கிடைக்காது என்றும், சிபிஐ விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை வெளிவரும் என்றும் லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் தெரிவித்தார். புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், நடிகர் விஜய் புதுச்சேரி குறித்து புரிதல் இல்லாமல் கருத்து தெரிவித்துள்ளார் என விமர்சனம் செய்தார். புதுச்சேரியைப் பற்றி தெளிவான புரிதல் இல்லாத நிலையில், அவருடன் கூட்டணி குறித்து அவசரமாக முடிவு எடுக்க…
போலி மருந்து விவகாரத்தில் சிபிஐ விசாரணை அவசியம் – சார்லஸ் மார்டின் பேட்டி
புதுச்சேரி: புதுச்சேரியில் கடல் சார்ந்த வரலாறு மற்றும் மீனவர் சமூகத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில், லட்சிய ஜனநாயக கட்சியின் கொடி கடலில் அறிமுகப்படுத்தப்பட்டது. மீனவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்கத்துடன் இந்த நிகழ்வு நடைபெற்றதாக கட்சித் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், புதுச்சேரியில் பல்வேறு அடிப்படை பிரச்சினைகள் நீண்ட காலமாக தீர்வு காணப்படாமல் இருப்பதாகக் கூறினார். குறிப்பாக, போலி மருந்து விவகாரத்தில் பல முக்கிய புள்ளிகள் தொடர்பில் உள்ளதாக குற்றச்சாட்டுகள்…
சாதாரண குடும்பத்தில் பிறந்தவன்; சராசரி மக்களின் சிரமங்கள் எனக்கு தெரியும் – ஜோஸ் சார்லஸ் மார்டின்
புதுச்சேரி:மக்களுக்கு நல்லது செய்யும் நோக்கத்துடன் தான் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளதாகவும், சாதாரண மனிதர்களின் வாழ்க்கைச் சிரமங்கள் தனக்கு நன்கு தெரியும் என்றும் லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் தெரிவித்தார். பாண்டி மெரினா கடற்கரையில் நடைபெற்ற கட்சி தொடக்க விழாவில் உரையாற்றிய அவர், “நாங்கள் பணத்துடன் பிறந்தவர்கள் அல்ல. என் தந்தை ரப்பர் தோட்டத் தொழிலாளி. எங்கள் குடும்பத்தின் தினசரி வாழ்வாதாரம் வெறும் 10 ரூபாய்தான். ஆட்டோவும் பேருந்திலும் பள்ளிக்குச் சென்றவன் நான். படிப்படியாக…
புதுச்சேரியில் குழந்தைகள் தின பரிசளிப்பு விழா – ஜோஸ் சார்லஸ் மார்டின் தலைமையில் நிகழ்ச்சி தொடக்கம்
புதுச்சேரி:புதுச்சேரியில் குழந்தைகள் நலனை முன்னிலைப்படுத்தும் வகையில், குழந்தைகள் தின பரிசளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வு, சமூக சேவகரும் லட்சிய ஜனநாயக கட்சியின் (LJK) தலைவருமான ஜோஸ் சார்லஸ் மார்டின் தலைமையில் தொடங்கப்பட்டது. நிகழ்ச்சியின் தொடக்கமாக குத்துவிளக்கு ஏற்றப்பட்டு, குழந்தைகளுக்கான பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் கலந்து கொண்ட இந்த விழாவில், கல்வி, திறன் வளர்ச்சி மற்றும் குழந்தைகள் நலன் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இந்த விழாவில் சிறப்பு…
ஐ.நா. மேடையில் உரையாற்றியதற்காக ஜோஸ் சார்லஸ் மார்டினுக்கு உலக சாதனை சங்கம் சான்றிதழ்
புதுச்சேரி:லட்சிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்கள், ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் உரையாற்றியதற்காக உலக சாதனைகள் சங்கம் வழங்கிய சான்றிதழ் மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். 9ஆம் தேதி 2025 டிசம்பர் , ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், லட்சிய ஜனநாயகக் கட்சியின் தலைவராக ஜோஸ் சார்லஸ் மார்டின் தனது முதல் உரையை நிகழ்த்தினார். அந்த உரையில், புதுச்சேரி மற்றும் இந்தியாவின் தமிழ் மண்ணை பெருமையுடனும், தொலைநோக்குப்…
புதுச்சேரியை உலக வரைபடத்தில் முன்னணி நகரமாக மாற்றுவதே இலக்கு – ஜோஸ் சார்லஸ் மார்டின்
புதுச்சேரி:புதுச்சேரியில் சம்பாதிப்பதற்காக அரசியலுக்கு வரவில்லை என்றும், மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் தான் அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளதாக லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் தெரிவித்தார். பாண்டி மெரினா கடற்கரையில் நடைபெற்ற லட்சிய ஜனநாயக கட்சியின் தொடக்க விழாவில் உரையாற்றிய அவர், புதுச்சேரியில் பல்வேறு அடிப்படை பிரச்சினைகள் நிலவி வருவதாகக் குறிப்பிட்டார். குடிநீர் தட்டுப்பாடு, மருத்துவத்துறையில் ஊழல் உள்ளிட்ட பல குறைகளுக்கு தீர்வு காண வேண்டிய அவசியம் உள்ளது என அவர் கூறினார்….
பாண்டி மெரினா கடற்கரையில் லட்சிய ஜனநாயக கட்சி தொடக்க விழா – 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.
புதுச்சேரி:புதுச்சேரி சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின் தலைமையிலான லட்சிய ஜனநாயக கட்சியின் தொடக்க விழா, பாண்டி மெரினா கடற்கரையில் வெகுவாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் புதுச்சேரி முழுவதிலும் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கட்சி தொடக்கத்தை உற்சாகமாகக் கொண்டாடினர். நிகழ்வின் முக்கிய அம்சமாக, லட்சிய ஜனநாயக கட்சியின் கொடி பாடல் வெளியிடப்பட்டது. “சொல் அல்ல செயல் தான் நமது லட்சியம்” என்ற வரிகளுடன் தொடங்கும் இந்த பாடல், கட்சியின் கொள்கைகள் மற்றும்…
லட்சிய ஜனநாயக கட்சி கொடி அறிமுகம் – ஜோஸ் சார்லஸ் மார்டின் கொடி ஏற்றி தொடக்கம்
புதுச்சேரி:புதுச்சேரியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள லட்சிய ஜனநாயக கட்சியின் (LJK) அதிகாரப்பூர்வ கொடி இன்று பொதுமக்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. கட்சியின் தலைவர் மற்றும் சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின் கட்சி கொடியை ஏற்றி வைத்து அரசியல் பயணத்தை தொடங்கினார். நீலம், வெள்ளை, சிவப்பு ஆகிய நிறங்களில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கொடியில், கையில் வேலுடன் சிங்க முத்திரை இடம்பெற்றுள்ளது. மேலும், கொடியில் ஆறு நட்சத்திரங்கள் இடம்பெற்றுள்ள நிலையில், கட்சியின் சின்னமாக LJK என்ற எழுத்தும் பதிக்கப்பட்டுள்ளது. வலிமை, தைரியம்,…
மும்மத வழிபாட்டுடன் லட்சிய ஜனநாயக கட்சி தொடக்கம் – ஜோஸ் சார்லஸ் மார்டின் பிரார்த்தனை
புதுச்சேரி:புதுச்சேரியில் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட உள்ள லட்சிய ஜனநாயக கட்சியின் தொடக்கத்திற்கு முன்பாக, கட்சியின் நிறுவனர் மற்றும் சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின் மும்மத வழிபாடுகளை மேற்கொண்டு பிரார்த்தனை செய்தார். பிள்ளையார் சுழி போட்டு அரசியல் பயணத்தை தொடங்கும் வகையில், அவர் முதலில் புதுவை மணக்குள விநாயகர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து, புதுவை தூய ஜென்மராக்கினி அன்னை பேராலயத்தில் பிரார்த்தனை செய்து, அமைதி, மக்கள் நலம் மற்றும் நல்லாட்சிக்காக வேண்டுதல் செய்தார்….
புதுச்சேரியில் ‘லட்சிய ஜனநாயக கட்சி’ தொடக்கம் – ஜோஸ் சார்லஸ் மார்டின் தலைமையில் அரசியல் பயணம்
புதுச்சேரி:புதுச்சேரியில் புதிய அரசியல் கட்சியாக லட்சிய ஜனநாயக கட்சி இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட உள்ளது. கட்சியின் கொடி மற்றும் கொள்கை பிரகடனம் பொதுமக்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள நிலையில், கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் தலைமையில் இந்த புதிய அரசியல் இயக்கம் உதயமாக உள்ளது. மக்கள் நலன், வெளிப்படையான நிர்வாகம் மற்றும் வளர்ச்சி நோக்குள்ள அரசியலை மையமாகக் கொண்டு கட்சி செயல்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியை சிங்கப்பூர் போல மேம்பட்ட நிர்வாகம், உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார…
புதுவை சட்டப்பேரவைக்கு போலீஸ் பாதுகாப்பு !
புதுச்சேரியில் தொடர் போராட்டம் காரணமாக சட்டப்பேரவை வளாகத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். புதுச்சேரியில் ஆளும் என். ஆர். காங்கிரஸ், பாஜக அரசு கடந்த தேர்தலில் பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்திருந்தது, அதுமட்டுமின்றி தொடர்ந்து நடைபெற்ற சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரின் போது வாரிசுதாரர்களுக்கு வேலை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது. இதனிடையே அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்னும் தேர்தலை சந்திக்க சில மாதங்களே…
மாயமான பெண் கொலை! கொலையாளி கைது!
மாயமான பெண் கொலை செய்யப்பட்டு சாக்கு மூட்டையில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் கழுத்தை நெறித்து படுகொலை. புதுச்சேரி வில்லியனூர் அடுத்த உருவையாறு மேம்பாலம் அருகே சாக்கு மூட்டையில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் வில்லியனூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சாக்கு மூட்டையை திறந்த போது, 45 வயது மதிக்கத்தக்க பெண் அழுகிய நிலையில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்….
ஆந்திரா பேருந்து விபத்து – உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திர பிரதேச மாநிலம் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் பக்தர்களை ஏற்றிக் கொண்டு சென்ற தனியார் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 9பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியானது. கடும் பனி மூட்டம் காரணமாக பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மலைப்பாதையில் உருண்டு நொறுங்கியது. இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து நிவாரண தொகையை அறிவித்துள்ளார். விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு 2,00,000 ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு…
தனியார் பேருந்து டயர் வெடித்து எதிர் திசையில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் உயிரிழப்பு!
திண்டிவனம் அருகே தனியார் டிராவல்ஸூக்கு சொந்தமான பேருந்தின் முன்பக்க டயர் வெடித்து சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் எதிர்திசையில் பாய்ந்ததில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். மேலும், தனியார் பேருந்தில் பயணித்த 25 பேர் காயமடைந்தனர். திருச்சியில் இருந்து சுமார் 25 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி தனியார் சொகுசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் திண்டிவனம் அடுத்த கேணிப்பட்டு அருகே பேருந்து நெருங்கியபோது…
Confed கைத்தறி ஊழியருக்கு உதவிய JCM மக்கள் மன்றத்தினர்!
புதுவை முத்தியால்பேட்டையில் கலையரசி என்ற கைத்தறி ஊழியர் Confedல் பணியாற்றி வந்தார். கால் முறிவு ஏற்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்த நிலையில் மேல் சிகிச்சைக்கு ஏழ்மை காரணமாக சிகிச்சை செய்ய இயலாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். Confed கைத்தறி நெசவாளர்களை சமூக சேவகர் சார்லஸ் மார்டின் சந்தித்த போது அவரிடம் சிகிச்சைக்காக உதவி கோரப்பட்டது. அவரது கோரிக்கையை ஏற்ற சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின் நிதியுதவி அளித்து உதவினார். அதன் பின்னர் கலையரசிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு…
காரைக்காலில் 200க்கும் மேற்பட்டோர் கண்டன பேரணி!
புதுவை மாநிலம் காரைக்காலில் போலி மருந்து விவகாரத்தை கண்டித்து காரைக்கால் போராளிகள் குழுவினர் சார்பில் 200க்கும் மேற்பட்டோர் புதுவை அரசுக்கு எதிராக கண்டன பேரணியில் ஈடுபட்டனர். புதுவையில் கோடிக்கணக்கான போலி மருந்துகள் பிடிபட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலி மருந்து தொழிற்சாலையை கண்டித்தும் இது தொடர்பாக புதுவை அரசு விசாரணை நடத்த வலியுறுத்தியும் இன்று காரைக்காலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி கண்டன பேரணியில் 200க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். புதிய பேருந்து நிலையத்திலிருந்து…
ஆந்திர பிரதேசத்தில் கோர விபத்து! பள்ளத்தாக்கில் விழுந்த பேருந்து! 9க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்!
ஆந்திர பிரதேசத்தில் 35 பக்தர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்ததில் 9க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. கடும் பனி மூட்டத்தின் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் உள்ள துளசிபாகலு என்ற பகுதியில் மலைப்பாங்கான இடத்தில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்தது. இதில் பேருந்தில் பயணித்த 9 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 75வது பிறந்த நாள் இன்று! தங்கத்தேர் இழுத்த ரசிகர்கள்!
நடிகர் ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாளையொட்டி புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் தங்க தேர் இழுத்து அவரது ரசிகர்கள் வழிபட்டனர்! புதுச்சேரி மாநில ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் ஆண்டுதோறும் மணக்குள விநாயகர் கோவிலில் வழிபாடு நடத்துவதும் ஏழை எளிய மக்களுக்கு நல உதவிகளை செய்வதும் ரஜினி ரசிகர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் இந்த ஆண்டு நடிகர் ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாளையொட்டியும் அவர் கலை உலகத்திற்கு வந்து 50 ஆண்டுகள் ஆனதையொட்டியும் சிறப்பிக்கும் விதமாக ரஜினி ரசிகர்கள்…
த.வெ.க. அலுவலகத்துக்கு வந்த பா.ம.க. வழக்கறிஞர் பாலு! திடீர் விசிட் ஏன் ?
பா.ம.க. செய்தித்தொடர்பாளரும் வழக்கறிஞருமான கே. பாலு இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்திற்கு வந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளின் கூட்டணி எந்தவிதத்தில் இருக்கப்போகிறது என்ற கேள்வி ஒருபுறம் எழுந்துள்ள நிலையில், பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்திற்கு பா.ம.க. வழக்கறிஞர் பாலுவின் திடீர் விசிட் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை வலியுறுத்தி, பாட்டாளி மக்கள்…
விஜயை முதல்வராக ஏற்றுக்கொள்வோரை அரவணைப்போம் – தவெக முக்கிய தீர்மானங்கள் வெளியீடு
பனையூர்:தமிழகவெற்றிக்கழகத்தின் (தவெக) மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் தயாரிப்பை முன்னிட்டு நான்கு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திமுக ஆட்சியை மாற்றி புதிய தமிழகத்தை அமைக்க வேண்டும் கூட்டத்தில் பேசப்பட்ட முக்கிய அம்சமாக, ஊழல் அதிகரித்து வரும் திமுக ஆட்சியை மாற்றுவது காலத்தின் தேவையாக உள்ளது என்று வலியுறுத்தப்பட்டது. புதியதோர் தமிழகத்தை உருவாக்க தவெக தலைவர் விஜயை முதல்வராக ஏற்றுக்கொண்டு…
2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா இன்று மோதல்
பஞ்சாப் மாநிலம் மொகாலி மாவட்டத்தில் உள்ள நியூ சண்டிகாரில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கட்டாக்கில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 101 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை துவம்சம் செய்து தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலி மாவட்டத்தில்…
தந்தைக்குச் சிலை வைப்பதா முக்கியம் ? – ஸ்டாலினை குறிவைத்து அண்ணாமலை கேள்வி
தமிழக அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் குறைபாடு தீவிரமாக உள்ளதைக் குறிப்பிட்டு, திமுக அரசு மீது பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அரசுப் பள்ளிகளில் கட்டிட வசதிகள் இல்லாததால் மாணவர்கள் மைதானத்தில் அமர்ந்து படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளின் துயர நிலை அண்ணாமலை தனது X தளத்தில் பகிர்ந்த பதிவில், “திமுக பொய்யான வாக்குறுதிகள்” – அண்ணாமலை குற்றச்சாட்டு அண்ணாமலை தொடர்ந்து, திமுக அரசு ஆட்சிக்கு…
சென்னை பனையூரில் தமிழக வெற்றிக்கழகத்தின் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்கும் முக்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமையகத்தில் தொடங்கியது. காலை 10 மணிக்கு தொடங்கிய இந்தக் கூட்டத்தில், வரவிருக்கும் தேர்தல் பணிகள், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணிகள், அடுத்தகட்ட மக்கள் சந்திப்பு திட்டங்கள் மற்றும் கட்சியின் மூலோபாய நகர்வுகள் குறித்து விரிவான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. புதுச்சேரி மக்கள் சந்திப்பைத் தொடர்ந்து ஆலோசனை சமீபத்தில் புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு…
போலி மாத்திரை விவகாரம் – 2 பேர் சரணடைந்தனர்!
போலி மாத்திரை தயாரித்து பல மாநிலங்களில் கோடிக்கணக்கில் விற்று தலைமறைவான தொழிற்சாலை அதிபர் உட்பட இரண்டு பேர் புதுவை கோர்ட்டில் சரண் அடைந்தனர். மேலும் போலீஸ் அவர்களை காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலி மாத்திரைகள் தயாரித்த தொழிற்சாலையில் உரிமையாளர் ராஜா அவரது உதவியாளர் விவேக் ஆகியோர் புதுவை நீதிமன்றத்தில் முன்ஜாமின் பெற்றனர். அப்பொழுது காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அவர்களுக்கு முன் ஜாமின் அளிக்கப்பட்டது. எனவே அவர்களது…
முதன்முறை ஐ.நா சபையில் அறிவிக்கப்பட்ட கட்சி
“நான் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்,லட்சிய ஜனநாயகக் கட்சியின் தலைவர்”. இந்தியாவின் புதுவை யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு தமிழன் என ஐ.நா மன்றத்தில் தன்னை அறிமுகப்படுத்திய சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின். சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின், சுவிட்சர்லாந்து ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மேடையில் உரையாற்றினார். மனித உரிமைகளின் முக்கியத்துவம், அது உலகளவில் வலுப்படுத்தப்பட வேண்டிய அவசியம் மற்றும் கல்வியின் சக்தி குறித்து தனது உரையில் விரிவாக பேசினார். அவ்வுரையின் போது,…
சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படம் – படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக தொடங்கியது!
சிம்புவின் ‘தக் லைப்’ திரைப்படத்திற்குப் பிறகு உருவாகும், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் புதிய படத்தில் சிம்பு கதாநாயகனாக நடித்துவருகிறார். ‘அரசன்’ என்று படத்துக்கு பெயரிடப்பட்டுள்ள நிலையில் இத்திரைப்படம் வடசென்னையை மையமாகக் கொண்ட கேங்ஸ்டர் கதையாக உருவாகிறது. இதில் சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குநர் நெல்சன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இந்த படத்தில், சிலம்பரசன் இளமையாகவும், முதுமையாகவும் சேர்ந்த இரண்டு வேறுபட்ட தோற்றங்களில் நடிப்பார் எனக் கூறப்படுகிறது….
நாங்கள் தயாராக உள்ளோம் என அறிவித்த இண்டிகோ விமான நிறுவனம்…
இண்டிகோ விமான சேவைகள் முழுமையாக சீராகிவிட்டதாக நிறுவனம் அறிவித்திருந்த நிலையில், மத்திய அரசு தினசரி சேவைகளில் 10% குறைக்க உத்தரவிட்டுள்ளது. புதிய விதிமுறைகள் தொடர்பான நடவடிக்கைகள் சரிவர மேற்கொள்ளப்படாததும், முன்பு 2,000க்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டது காரணமாக பயணிகள் பெரும் சிரமம் அனுபவித்தும் வருகின்றன. நாட்டின் மிகப்பெரிய விமான சேவை வழங்குநரான இண்டிகோ தினமும் சுமார் 2,200 சேவைகளை இயக்கி வருகிறது. ஆனால் அரசின் புதிய உத்தரவால், தினசரி 200க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்படும்…
14 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!
புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக (PTU) ஓய்வூதியர்கள் பல மாதங்களாக நிலுவையில் உள்ள தொகைகள் மற்றும் நலன்கள் வழங்கப்படுவதில் தொடர்ந்து ஏற்படும் தாமதத்தை கண்டித்து, பல்கலைக்கழக வளாகத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதில் 100 க்கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற ஊழியர்கள் பங்கேற்றனர். புதுச்சேரி காலாபட்டு பகுதியில் இயங்கி வரும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்கள் எண்ணிக்கை 200-ஐ கடந்துள்ளது. கடந்த சில மாதங்களாக இவர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் பிற நல நிதிகள் வழங்கப்படுவதில்…
மோசமான நிலையில் தனியார் பள்ளி! மழைநீரும் கழிவுநீரும் கலந்தோடும் அவலம்!
புதுச்சேரியில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தனியார் பள்ளிகளில் ஆய்வு ஏதும் மேற்கொள்ளாததால் மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் இயங்கி வரும் ஒரு தனியார் பள்ளியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இங்கு மழைநீர் தேங்கி நிற்பதால் பள்ளியின் அருகில் வெளியேறும் கழிவுநீர் மழை நீருடன் கலந்து மாணவர்கள் அதன் மேல் நடந்து செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பெருமளவு கொசுக்கள் உற்பத்தியாகி அங்கு பயிலும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அவ்வப்போது உடல்நிலை குறைபாடு ஏற்படுகிறது….
சேதமடைந்த சமூகநலக்கூடம் – நேரில் பார்வையிட்ட JCM மக்கள் மன்ற நிர்வாகிகள்
திருநள்ளாறு தொகுதிக்குட்பட்ட இளையங்குடி கிராமத்தில் சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்களின் அறிவுறுத்தலின்படி அப்பகுதியில் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்த JCM மக்கள் மன்ற நிர்வாகிகள். இளையங்குடி பகுதியில் சமுதாய நலக்கூடம் மிக மோசமான நிலையில் உள்ளது. அங்கு வசிக்கும் மக்களுக்கு ஆபத்து ஏற்படும் விதத்தில் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. எனவே அப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின் சார்பில் திருநள்ளாறு தொகுதி JCM…
திருநள்ளாறு தொகுதியில் பாதிக்கப்பட்ட மக்கள்! களத்தில் இறங்கிய JCM மக்கள் மன்றத்தினர்!
புதுவை மாநிலம் திருநள்ளாறு தொகுதி கருக்கங்குடி கிராமத்தில், சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின் அறிவுறுத்தலின்படி, திருநள்ளாறு தொகுதி JCM மன்ற தலைவர் G.V. பிரபாகரன் தலைமையில் மழையால் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்களை நேரில் சந்தித்து தார்ப்பாய் வழங்கும் நலத்திட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நலத்திட்டம் வழங்கும் நிகழ்வில் JCM மக்கள் மன்ற நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
த.வெ.க. கார் மீது விழுந்த தகரம், பேனர்களால் பரபரப்பு!
புதுச்சேரி துறைமுக மைதானத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கலந்து கொண்ட பரப்பரை கூட்டம் நடைபெற்றது. மைதானத்தில் கூட்டத்திற்காக தொண்டர்கள் செல்லும் பாதையில் இருபுறமும் தகரம் கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டு பேனர்கள் கட்டப்பட்டிருந்தன. கூட்டம் முடிந்த பிறகு காற்றின் வேகம் அதிகமாக இருந்ததன் காரணமாக தகர தடுப்புகள், பேனர்கள் சாய்ந்து விழுந்தன. அப்போது கூட்டம் முடிந்து மைதானத்திலிருந்து செவிலியர்கள் சென்ற காரின் மீது பேனர்கள் விழுந்ததையடுத்து அங்கிருந்தவர்கள் பேனர்கள், தடுப்புகளை தூக்கி அப்புறபடுத்தி காரை வெளியே…
“தல வாழ்க! தளபதி வாழ்க!” என முழங்கிய த.வெ.க. தொண்டர்கள்!
அஜித் – விஜய் ஒன்றிணைந்த பேனருடன் புதுவையில் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டத்திற்கு வந்து கலந்துகொண்ட த.வெ.க. தொண்டர்கள். புதுச்சேரியில் இன்று தமிழக வெற்றி கழகம் சார்பில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றினார். இதனை கேட்பதற்காக புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான தமிழக வெற்றி கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அஜித் ரசிகர்களும் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் விஜயும் அஜித்தும் தோல் மீது கை…
காரைக்கால் – சபரிமலை கோவில் அன்னதானத்திற்கு அனுப்பப்பட்ட பொருட்கள்!
காரைக்காலில் இருந்து ஸ்ரீஐயப்ப தர்மா சேவா சங்கம் சார்பில் சபரிமலை சன்னிதானத்தில் அன்னதானம் செய்ய தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை அனுப்பி வைத்தனர். புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள ஐயப்ப பக்தர்கள் ஒருங்கிணைந்த ஸ்ரீஐயப்ப தர்மா சேவா சங்கம் சார்பில் சபரிமலை சன்னிதானம் மற்றும் எரிமேலி ஆகிய இடங்களில் வரும் 10ஆம் தேதி முதல் அடுத்த மாதம் பத்தாம் தேதி வரை என 30 நாட்கள் ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் அளிக்கும் வகையில் அதற்கு தேவையான…
காவல்துறை விதிமுறைகளை மீறிய புஸ்ஸி ஆனந்தை கடுமையாக எச்சரித்த பெண் காவல் உயரதிகாரி
புதுச்சேரியில் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு போதிய அளவில் கூட்டம் சேராததால், QR-CODE அனுமதி சீட்டு இல்லாதவர்களை அனுமதிக்ககோரி, அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் உள்ளிட்ட த.வெ.க. நிர்வாகிகள் காவல்துறை முதுநிலை கண்காணிப்பாளர் ஈஷா சிங்கிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரமடைந்த முதுநிலை கண்காணிப்பாளர் ஈஷா சிங், “உங்களால் ஏற்கனவே நிறைய பேர் உயிரிழந்திருக்கின்றனர். யாரேனும் உயிர் இழந்தால் நாங்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். காவல்துறை என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் சொல்ல வேண்டாம்” என…
மியான்மரில் நிலநடுக்கம்: ரிக்டரில் 3.7 ஆக பதிவு
மியான்மர் நாட்டில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. நள்ளிரவு 1.21 மணியளவில் பதிவான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.7 என அளவிடப்பட்டுள்ளது. நிலநடுக்கம் குறுகிய நேரம் மட்டுமே உணரப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கம் ஏற்பட்ட உடனே சில பகுதிகளில் மக்கள் எச்சரிக்கையுடன் வீடுகளுக்குப் வந்தனர். எனினும், அதிர்வு மிகக் குறைவாக இருந்ததால் எந்தவித பெரும் அச்சமும் நிலவவில்லை. மியான்மர் நிலநடுக்க ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, இந்த அதிர்வால் கட்டிடங்கள், பொதுமருத்துவப்…
இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
டெல்லியிலிருந்து சென்னை நோக்கி வந்த இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக அச்சுறுத்தல் தகவல் வந்ததால் விமானத்துறையில் பரபரப்பு நிலவியது. இன்று காலை பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட இந்த விமானத்தில் நடுவழியில் விமானத்துறைக்கு வந்த தகவல் பாதுகாப்பு அமைப்புகளை எச்சரிக்கையாக்கியது. உடனடியாக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, விமானம் எந்த பிரச்சனையும் இல்லாமல் சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. விமானம் தரையிறங்கியவுடன் அனைத்து பயணிகளும் ஒழுங்காக வெளியேறச் செய்யப்பட்டு, விமானத்தில் உள்ள சாமான்கள் மற்றும் பிரிவுகள் முழுவதும்…
“விஜய் பொதுக்கூட்டம்” துப்பாக்கியுடன் வந்த நபர்
புதுவை : இன்று புதுவையில் நடைபெற உள்ள தவெக மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டத்தை முன்னிட்டு அங்கு பரபரப்பும், பின்னர் தளர்வும் உருவானது. உப்பளம் துறைமுகம் அருகே பெரிய திரளாக மக்கள் திரண்ட நிலையில் கூட்டத்தினுள் நுழைவதற்கான அனுமதி பற்றிய விவகாரம் குறிப்பிடத்தக்கதாக அமைந்தது. முதலில் கூட்டத்திற்கான நுழைவு பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வாயில் முன்பு பல தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் நிறுத்தப்பட்டனர். இதை தொடர்ந்து கட்சியின் பொது செயலாளர் ஆனந்த் பேச்சுவார்த்தை நடத்தி, பாஸ்…
புதுவையில் இன்று தவெக பொதுக்கூட்டம்
புதுவை : த.வெ.க (தமிழக வெற்றிக் கழகம்) தலைவர் விஜய் தலைமையில் நடைபெற உள்ள இந்த சிறப்பு பொதுக்கூட்டம், புதுவை உப்பளம் மைதானத்தில் ஆரம்பமாக உள்ளது. கட்சியின் சமீபகால அரசியல் முன்னேற்றங்கள், எதிர்கால திட்டங்கள், மாநில வளர்ச்சி தொடர்பான இலக்குகள் உள்ளிட்ட பல பிரச்சினைகள் குறித்து இந்த மேடையில் முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுக்கூட்டத்தில் பங்குபெற விரும்புவோருக்கு நுழைவு சீட்டு கட்டாயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கியூ. ஆர் (QR) கோடு இணைந்த நுழைவு சீட்டு…
கோவையில் செங்கல் சூளைகளுக்கு ரூபாய் 900 கோடி அபராதம்!
கோவை மாவட்டம், தடாகம் பகுதியில் செயல்பட்டு வந்த செங்கல் சூளைகளுக்கு ரூபாய் 900 கோடி அபராதம் விதிக்க டெல்லியில் உள்ள எரிசக்தி ஆராய்ச்சி நிறுவனம் (டெரி) ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்து உள்ளது.செங்கல் சூளைகளுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை நகல் அனுப்பி வருகிறது.கோவை மாவட்டம் சின்ன தடாகம், வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம், சோமயம்பாளையம், பன்னிமடை உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த செங்கல் சூளைகளால் மலையடிவாரம் அருகே உள்ள ஓடைகள் நீர் வழித்தடங்கள் சட்டவிரோதமாக 1.10 கோடி…
த.வெ.க. கூட்டம் – தயார் நிலையில் புதுவை!
புதுவையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பரப்புரை கூட்டம் காவல்துறையின் கடுமையான நிபந்தனைகளுடன் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்க அனுமதி இல்லை எனவும் புதுவையை சேர்ந்த 5000 பேருக்கு மட்டுமே அனுமதி என தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். முன்னதாக தமிழக வெற்றி கழக கூட்டத்திற்கு பல்வேறு நிபந்தனைகளை காவல்துறை அறிவித்திருந்தது.
தமிழக வெற்றி கழக கூட்டத்திற்கு கடும் நிபந்தனைகள்!
தமிழக வெற்றி கழகத்தின் கூட்டத்திற்கு புதுவை காவல்துறை வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. புதுவையைச் சேர்ந்த ஐந்தாயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி என்றும் க்யூ ஆர் கோடு அனுமதி சீட்டு உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் அண்டை மாநிலமான தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை எனவும் கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் முதியோருக்கு அனுமதியில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது. குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் பாதுகாப்பு வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும் என தமிழக வெற்றி…
புதுவை – நெட்டப்பாக்கத்தில் தடுப்பூசி போடப்பட்ட குழந்தை உயிரிழந்த பரிதாபம்! நடவடிக்கை எடுக்க JCM மக்கள் மன்றத்தினர் மனு!
காரைக்கால் சுகாதாரத்துறை விழிப்புடன் செயல்பட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க சுகாதாரத்துறை இணை இயக்குனரிடம் JCM மக்கள் மன்றம் சார்பில் கோரிக்கை மனு அளித்த மன்றத்தினர். புதுச்சேரி நெட்டப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்திய மூன்று மாத கைக்குழந்தை உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவர் பற்றாக்குறையால் உயிரிழந்த நிலையில், மக்கள் சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின் அறிவுறுத்தலின்படி காரைக்கால் JCM மக்கள் மன்றத்தின் தெற்கு கிளை தலைவர் அப்துல் பாசித் தலைமையில் நெடுங்காடு கோட்டுச்சேரி கிளை தலைவர்…
“ஹர ஹர சிவாய நம ஓம்”! விண்ணை பிளந்த பக்தர்கள் கோஷம்! – காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்!
உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் குடமுழுக்கு, வாண வேடிக்கைகள் மற்றும் 70க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்களுடன் வாத்தியங்கள் முழங்க, புனித நீர் தெளிக்கப்பட்டு இன்று அதிகாலை சிறப்பாக நடைபெற்றது. கோவில் திருப்பணிகள் ரூ.29 கோடி மதிப்பீட்டில் பழமை மாறாமல் நடைபெற்றன. பஞ்சபூத தலங்களில் நிலத்திற்கு உரியதாக போற்றப்படும் காஞ்சிபுரம் ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் கோவில், சுமார் 3500 ஆண்டுகள் பழமையானது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கோவிலில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. இன்று அதிகாலை 5:45…
பழனி – திருஆவினன்குடி கோவில் கும்பாபிஷேகம்! ஆயிரக்கணக்கில் குவிந்த பக்தர்கள்!
பழனியில் உள்ள திருஆவினன்குடி கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி மலையடிவாரத்தில் உள்ள திருஆவினன்குடி கோயிலில் கடந்த 4ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. இந்த நிலையில், இன்று அதிகாலை 4 மணிக்குச் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க 6ஆம் கால யாகசாலை வேள்விகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, புனித கலசங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, குழந்தை வேலாயுத சுவாமி கருவறை விமானம்,…


